Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முன்ன ‘தல’ தீபாவளி, இப்போ தல பொங்கல்!!

•On November 21, 2013
veeram_fl006
Share
veeram_fl006 “ஆரம்பம்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் பொங்கலுக்கு வெளியாக வேகமாக வளர்ந்து வருகிறது அஜீத்குமாரின் 'வீரம்'. மூன்று மாதங்களுக்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை உத்தேசமாக அறிவித்திருந்தனர் தயாரிப்பாளர்கள். தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு வேட்டி, சட்டையில் உள்ள அவரது தோற்றப்பொலிவும், கிராமியக்களம் கொண்ட கதைக்கருவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சரியான பொங்கல் விருந்துக்கு உத்திரவாதம் என்பது மட்டும் உறுதி. கடந்த ஆகஸ்ட் மாதம் படத்தின் முதல் ஸ்டில் வெளிவந்ததில் இருந்தே படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. 'வீரம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. மிக பிரம்மாண்டமாக, பல்வேறு நட்சத்திர குவியலுடன் படமாக்கப்பட்டுள்ள 'வீரம்' நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சி ஊட்டும் என பட தயாரிப்பாளர்கள்  வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி உறுதியாக கூறினர். ஆக தல தீபாவளியை தொடர்ந்து பொங்கலும் தல பொங்கல் தான்....

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.