ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி படம்!!

1977ம் ஆண்டு வெளியான படம் 16 வயதினிலே. பாரதிராஜா இயக்கிய படத்தில் கமல்ஹாஸன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதாபாத்திரங்களான சப்பானி, பரட்டை, மயிலு மிகவும் பிரபலம். 36 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை தற்போது டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ரஜினி, கமல் இருவரும் கலந்து கொண்டு வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். படத்தை கலைப்புலி எஸ். தாணு ரிலீஸ் செய்கிறார். படம் தமிழகத்தில் 25௦ அரங்குகளிலும், கர்நாடகத்தில் 55 மற்றும் மும்பையில் 10 அரங்குகளிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதே நாளில் தான் கோச்சடையான் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட உள்ளது. ஆக ரஜினி ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா தான்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமுன்ன ‘தல’ தீபாவளி, இப்போ தல பொங்கல்!!
Next Postஇரண்டாம் உலகம் – விமர்சனம்!
