தமிழில் ரீமேக்காகும் மலையாள “காக்டெயில்”!

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற காக்டெயில் என்ற படம் தமிழில் “அதிதி” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் INC என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாகிறது.
நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு – ஜெய், இசை – பரத்வாஜ். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இவர் விஜய் நடித்த “அழகிய தமிழ் மகன்” படத்தின் இயக்குனர்.
தற்போது அஜீத் நடிக்கும் வீரம் படத்திற்கும் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் 18-ந் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
