Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நல்ல கருத்தை வலியுறுத்தி இயக்குனராகும் ஸ்ரீப்ரியா!

•On July 10, 2013
Malini 22 Palayamkottai Press Meet (19)
Share
Malini 22 Palayamkottai Press Meet (19) மலையாளத்தில் 2012 ல் வெளியாகி இயக்குனர் ஆஷிக் அபு, நடிகர் பகத் பாசில், நடிகை ரீமா கல்லிங்கல் ஆகியோருக்கு புகழை சம்பாதித்து தந்த படம் 22 Female Kottayam. இந்தப்படம் இன்றைய இளம் மலையாள இயக்குனர்களின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா. படத்துக்கு மாலினி 22 பாளையங்கோட்டை என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை பற்றிய அறிமுக கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி, சுரேஷ்பாலாஜி, நாயகி நித்யா மேனன், நரேஷ், வித்யுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் ஸ்ரீப்ரியா பேசும்போது, "ஒரு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் தொட்ரியபோது நாம் ஏன் தினமும் பார்க்கும் ஒரு விஷயதியா எடுத்து சமூகத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்த கூடாது என்று தோன்றியது. அப்போது தான் இந்த படத்தின் மையக்கதையை எடுத்துக்கொண்டு எனக்கு தோன்றிய விஷயங்களை வைத்து திரைக்கதை அமைத்தோம். முதலில் தோன்றிய விஷயம் நாயகியாக நித்யா மேனன், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்த நடிகை, நடிக்க தெரிந்த நடிகை. அவரது கண்களே 50 சதவீத நடிப்பை கொடுத்து விடும். இந்த படத்தை தயாரிக்க எனக்கு மிகவும் உதவியவர், என் ஆசையை நிறைவேற்றியவர் என் கணவர். அவரிடம் இன்னொரு ஆசையையும் சொல்கிறேன் நான் ஒரு இசை ஆல்பத்தையும் உருவாக்க வேண்டும், அதற்கும் அவர் மனது வைக்க வேண்டும்” என்றார். தன்னை ஏமாற்றி கற்பை சூறையாடியதும் இல்லாமல் ஜெயிலுக்கு அனுப்பும் பெரிய இடத்து பிள்ளையை ஒரு பெண் எப்படி பழி வாங்குகிறாள் என்பது படத்தின் மையக்கதை. கதாநாயகி கேஷுவலாக தண்ணி அடிக்கிற, படுக்கையை பகிர்ந்து கொள்கிற காட்சிகள் மலையாளத்தில் சகஜமாக இடம் பெற்றன. தமிழிலும் “A“ சான்றிதழோடு தான் படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.