Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"ஒரே ஞாபகம்" படத்தின் நாயகியின் பெயர் “த்ரிதா சௌத்ரி”!

•On July 10, 2013
Tridha Choudhury 12
Share
Tridha Choudhury 1 இயக்குனர் ராதாமோகனின் உதவியாளர் விக்னராஜன் இயக்கும் முதல் படம் "ஒரே ஞாபகம்". கே.பூர்ணா சந்திரா தயாரிக்கிறார். சங்கர் டக்கர் இசையமைக்க, எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கியும், தாமரையும் பாடல்களை எழுதுகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளிலிருந்தே படக்குழுவினர் படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை வெளியிடாமல் அமைதி காத்து வந்தனர். நாயகன் மற்றும் நாயகி ஆகிய இருவருமே புதுமுகங்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் கூட நாயகன் மற்றும் நாயகியின் முகம் காட்டப்படவில்லை. ஒரு வழியாக சமூக வலைதளங்களில் "ஒரே ஞாபகம்" படத்தின் நாயகியின் பெயர் “த்ரிதா சௌத்ரி” என்று சில தகவல்கள் கசிந்துள்ளன. இவர் ஜான்சன் &, ஜான்சன் விளம்பரங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றன்செய்தியின் மூலமாக த்ரிதா சௌத்ரியின் சில புகைப்படங்களையும், தேர்வு ஒத்திகை காட்சிகளையும் (Audition Video Clips) வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். Tridha Choudhury 2 Tridha Choudhury 3 Tridha Choudhury 4 Tridha Choudhury 5 Tridha Choudhury 6 Tridha Choudhury 7 Tridha Choudhury 8 Tridha Choudhury 9 Tridha Choudhury 10 Tridha Choudhury 11 Tridha Choudhury 12 Tridha Choudhury 13

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.