Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் தமிழ் சினிமாவில் ஸ்ரீப்ரியா!

•On June 6, 2013
sripriya-13-3
Share
sripriya-13-3 தமிழ் சினிமாவில் சாதித்த நிறைய நடிகைகள் சினிமாவில் இயக்குநராகி, சினிமாவுடன் தனது தொடர்பை மேலும் வலுப்படுத்தியே வந்திருக்கிறார்கள். ரேவதி, ரோஹிணி, சுஹாசினி என்ற வரிசையில் முன்னணி நடிகை ஒருவரும் இணைகிறார். அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்த ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை பெற்றவர் ஸ்ரீப்ரியா. சினிமா இயக்குவது ஸ்ரீப்ரியாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே சாந்தி முகூர்த்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரு படங்களை இயக்கியுள்ள ஸ்ரீப்ரியா, 5 சீரியல்களையும் இயக்கியுள்ளார். இப்போது மீண்டும் சினிமா இயக்க வருகிறார். மலையாளத்தில் வெளியான 22 ஃபீமேல் கோட்டயம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஸ்ரீப்ரியா. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நித்யா மேனன். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஜூலையில் ஆரம்பித்து, டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் ஸ்ரீப்ரியா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.