உங்களுக்கு எப்பவும் நான்தான் ஜோடி - தனுஷிடம் சோனம் கபூர் அதிரடி!

தனுஷ் நடிக்கும் முதல் இந்திப் படம் ராஞ்ஜனா. ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர். ராஞ்ஜஹனா படத்தின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
பட்டு வேட்டி, சட்டையில் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்திருந்தார் தனுஷ். வட இந்தியப் பெண்ணான நாயகி சோனம் கபூர் தமிழ் பெண் போல புடவை, ரவிக்கை, தலைநிறைய மல்லிகைப்பூ அணிந்து வந்திருந்தார். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமாக இருப்பதாக மீடியாக்கள் கொளுத்திப் போட்டுள்ளன. இந்த நிலையில் இருவரும் ஜோடியாக நின்று போஸ் கொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்க பதில் சொல்ல ஆரம்பித்தனர்.
அப்போது ஒரு நிருபர், "பாலிவுட்டில் அழகழகான ஹீரோயின்கள் நிறைய இருக்கிறார்கள். இப்போது சோனம் கபூருடன் ஜோடி போட்டுவிட்டீர்கள். நீங்கள் அடுத்து ஜோடி சேர விரும்பும் அழகிய நாயகி யார்?" என்றார்.
உடனே தனுஷ் அதை பக்கத்திலிருந்த சோனம் கபூருக்கு மொழி பெயர்த்துச் சொல்ல, உடனே தனுஷிடம், அடுத்தடுத்த படங்களிலும் நான் மட்டுமே உங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றார் சோனம் கபூர்.
உடனே தனுஷ். "அடுத்தடுத்த படங்களிலும் அவங்கதான் எனக்கு ஜோடியா நடிக்க விரும்பறாங்களாம்... அவங்கதான் இப்படி சொல்றாங்க.. இது கெமிஸ்ட்ரி... அது இதுன்னு என்ன வேணா நினைச்சுக்கங்க. இந்த பீல்டுல இருந்தா இதையெல்லாம் பேஸ் பண்ணித்தான் ஆகணும். என்னைப் பொருத்த வரை கதை தான் முக்கியம். ஹீரோயின் யாருன்னு அப்புறம் பார்த்துக்கலாம்," என்றார்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
