Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜோடி சேரும் காமெடி கூட்டணி!

•On June 15, 2013
yaya-movie-stills-550x320
Share
yaya-movie-stills-550x320 கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் இரண்டாக பிரிந்து இரண்டு படங்களை தரவிருக்கிறார்கள். இரண்டு படங்களிலும் இருக்கிறார் சந்தானம். அதாவது இயக்குனர் மணிகண்டன் மற்றும் பவர் ஸ்டார் இல்லாமல் வாலிப ராஜா என்ற பெயரில் ஒரு படமும், இயக்குனர் மற்றும் சந்தானம் சேர்ந்து தினசரி 4 காட்சிகள் என்ற பெயரில் மற்றொரு படமும் தயாராகிறது. இயக்குனர் மணிகண்டன் சந்தானம், மிர்ச்சி சிவாவை வைத்து தினசரி 4 காட்சிகள் என்ற படத்தை எடுக்கிறார். மிர்ச்சி சிவா, சந்தானம் மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை வைத்து அவர் தினசரி 4 காட்சிகள் படத்தை எடுக்கிறார். படத்தை தேனப்பன் தயாரிக்கிறார். ஏற்கனவே சிவா, சந்தானம் கூட்டணி கலகலப்பில் கலக்கியது. அந்த கூட்டணி தில்லு முல்லுவிலும் வெற்றி பெற்றுள்ளது. தில்லு முல்லு படத்தில் சந்தானத்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது. தயாராகி வரும் யா யா என்ற படத்திலும் சிவா, சந்தானம் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் சேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.