அப்போ பிட்சா, இப்போ ஜிகர்தண்டா!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் புதிய படத்திற்கு ஜிகர்தண்டா என்று பெயரிட்டுள்ளனர்.
தமிழில் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் சித்தார்த் நாயகனாக நடிக்க, லக்ஷ்மி மேனன் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சிம்மா, கருணா ஆகியோரும் நடிக்கிறார்கள். பீட்சா மாதிரி எதிர்பாராத களத்தில் ஜிகர்தண்டாவும் பயணிக்குமாம்.
மதுரை பின்னணியை கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். மதுரையை தொடர்ந்து சென்னையிலும் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஜோடி சேரும் காமெடி கூட்டணி!
Next Postதில்லு முல்லு - விமர்சனம்!
