Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாயக வேஷத்தில் தொடரும் சந்தானம்!

•On June 21, 2013
siddharth-and-santhanam-awesome-expression-photo-still-movie-theeya-velai-seiyyanum-kumaru
Share
siddharth-and-santhanam-awesome-expression-photo-still-movie-theeya-velai-seiyyanum-kumaru கண்ணா லட்டு தின்ன ஆசையாவிற்கு பிறகு சந்தானம் நடிக்கும் படங்களில் பாதி அவர் ஹீரோவாகவோ அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கும் படமாகவோ அமைந்து வருகிறது. சிவாவுடன் இணைந்து யாயா, கண்ணா லட்டு தின்ன ஆசையா இயக்குனர் மணிகண்டனுடன் இணைந்து தினசரி 4 காட்சிகள், கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிகூட்டணியோடு வாலிபராஜா என நாயகன் ரோலிலேயே நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றுமொரு படம் பிரமாண்ட பட்ஜெட்டில் அவர் கையில் வந்து சேர்ந்துள்ளது. அந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் கலக்கிய மரியாதை ராமண்ணா என்ற தெலுகு படத்தின் தமிழ் ரீமேக். பி.வி.பி. சினிமாஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்திற்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை முதலில் இயக்குவதாக இருந்தவர் சேட்டை இயக்குனர் கண்ணன். அவர் தற்போது வேறு படத்தில் பிஸியாக இருப்பதால் காமெடி நடிகரும், ஜீவாவின் அசிஸ்டெண்டுமான ஸ்ரீநாத்தை இயக்குனராக்கியிருக்கிறார்கள். இவர் ஏற்கனவே முத்திரை என்ற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.