Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பத்து நாள் ரீ-சூட்! கவலைப்படாத தயாரிப்பாளர்!!

•On June 21, 2013
desingu
Share
desingu மனம் கொத்தி பறவை படத்திற்கு பின் இயக்குனர் எழில் இயக்கும் அடுத்த படம் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி, சூரி, ரவிமரியா, சிங்கம் புலி, சாம்ஸ் ஆகியோர் நடிப்பில் கலகல காமெடி படமாக உருவாகியிருக்கிறது. மனம் கொத்தி பறவைக்கு பின் அதே டெக்னிகல் டீமுடன் இணைந்து தேசிங்கு ராஜாவை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எழில். இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை நேற்று வெளியானது. இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன்  தயாரித்துள்ளார். இந்த படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் எழில், "முந்தைய படத்திற்கு கூட முழு ஸ்க்ரிப்டுடன் வேலை பார்த்தேன். இந்த படத்திற்கு பாதி கதை கூட ரெடியாகாமல் தான் வேலை செய்தேன். என்னை நம்பி தயாரித்த தயாரிப்பாளருக்கும், நாயகன் விமலுக்கும்  நன்றி. காமெடி படம் எடுக்கும்போது முழு கதையும் சொல்வது கடினம். அத்தோடு படத்தின் சில காட்சிகளில் திருப்தி இல்லாமல் பத்து நாட்கள் மீண்டும் அதே காட்சிகளை எடுத்தேன். தயாரிப்பாளர் எதையும் சொல்லாமல் பணம் கொடுத்து உதவினார். விமலும், சூரியும் போன படத்தில் நண்பர்கள். இந்த படத்தில் எதிரிகள். சூரியின் பெயர் சூர்யா.அவர்தான் நாயகியின் தாய்மாமன், நாயகனின் தாய்மாமனாக சிங்கம் புலி மற்றும் சாம்ஸ் நடித்துள்ளனர். ரவி மரியா காமெடித்தனம் கலந்த வில்லனாக நடித்துள்ளார். ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிரிக்க வைக்கும் காமெடி படமாக உருவாக்கியுள்ளோம். ஏற்கனவே இமானின் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படமும் நிச்சயம் பெருவெற்றி பெறும், என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.