Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பேரரசு படத்தில் கொடூர “தாதா” வேடத்தில் பார்த்திபன்!!

•On November 18, 2013
Ambuli
Share
Ambuli காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் “திகார்”. இந்த படத்தில் நகரத்தையே நடுநடுங்க வைத்து போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப்பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். பார்த்திபன் ஜோடியாக  நடிக்கும் கதாநாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். கதாநாயகிகளாக அகன்ஷா பூரி, கிருதிபாபட் நடிக்கிறார்கள் காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ்,கே.ஜெயன், ரியாஸ்கான், தேவன், கிரேன் மனோகர், சிசர் மனோகர் மற்றும் கொட்டாச்சி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - சேகர்.வி.ஜோசப். இசை - ஆர்.கே.சபீர். பாடல்கள், திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறார் பேரரசு. படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்டபோது, “ஆக்ஷன் படம்ன்னா எப்படி இருக்கும்ன்னு ரசிகர்கள் நினைப்பாங்களோ அதைவிட அதிரடியா இந்தபடம் இருக்கும். யாரையும் யோசிக்கவே விடாதா மாதிரி ஆக்ஷன் இதில் இருக்கும். படத்தின் பெரும்பகுதி துபாய், ஸ்பெயின், மும்பை போன்ற இடங்களில் பலகோடி செலவு செய்து படமாக்கி இருக்கோம். படப்பிடிப்பு சென்னையில் 11-ந் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.