மோதலை மறந்து காதலை நினைவுபடுத்தும் “ஒரு மோதல் ஒரு காதல்”!

கந்தன் கியர் அப் எண்டர்டெயின்மெண்ட் என்ற நறுவனத்தின் மூலம் உருவாகும் முதல் திரைப்படம் ஒரு மோதல் ஒரு காதல். முழுவதும் நகைச்சுவை கலந்த இந்த காதல் கதையை இலயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூணிகேஷன் முடித்து, ஐந்து வருடங்களாக விளம்பர துறையில் பணிபுரிந்த அறிமுக இயக்குநர் கீர்த்தி குமார் இயக்கியுள்ளார். கதையுடன் ஒன்றிய காதாபாத்திரங்களே ஒரு அழகான கதையை மெருகூட்ட தேவைப்படும் ஒன்று. சூரியநகரம், நாங்க போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விவேக் நாயகனாக நடிக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த மாடல் மேகா பர்மன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். டேம் 999 திரைப்படத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் பிரமீட் நடராஜன் அவர்கள் ஒரு நகைசச்சுவை கலந்த எதார்த்தமான தந்தை காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லொள்ளு சபா சுவாமிநாதன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் யுகா. ரவுத்திரம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். அறிமுக இசையமைப்பாளர் தயானந்த் பிறைசூடன் இசையமைக்கிறார். பிறைசூடன் மற்றும் பா.விஜய் பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பாளர் சத்யராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஹரிகேஷ், கலை இயக்குனர் வினோத், நடன இயக்குநர் பிரேம் ஆகியோரின் பங்களிப்பும் இத்திரைப்டத்திற்கு வலு சேர்த்துள்ளது.
நகைச்சுவை, நட்பு, குடும்பம் என பலவற்றை உள்ளடக்கிய இந்த காதல் கதை உங்கள் மோதலை மறந்து காதலை மட்டும் நினைவுபடுத்தும் ஒரு வித்தியாசமான காதல் பயணமாக அமையும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபுதுமுகங்களின் முயற்சியில் வளரும் V4!
