தீமையை அழிக்கும் ஜானி டெப்பின் சாகசங்கள் "The Lone Ranger”!

நிறைவான படங்களை தயாரிக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு தி லோன் ரேஞ்சர். 1933-ல் Frank Striker மற்றும் George Trendle ஆகியோரால் வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்ட கற்பனை கதாபாத்திரம் தான் இந்த “லோன் ரேஞ்சர்” அநீதியை எதிர்ப்பவனாக, தவறு செய்பவர்களை தண்டிப்பவனாக, அப்பாவிகளின் அறங்காவலனாக. வெற்றி உலா வரும் முகமூடி மனிதன் தான் இந்த லோன் ரேஞ்சர். வானொலி தவிர தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம் மற்றும் நகைச்சுவை தொடர்களாக மக்களை சென்று சேர்ந்துள்ளது லோன் ரேஞ்சர்.
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் வெற்றிகூட்டணியான தயாரிப்பாளர் Jerry Bruckheimer, இயக்குனர் Gore Verbinski மற்றும் நாயகன் Jhony Depp ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது இந்த ஆக்ஷன் படம். Armie Hammer என்ற புதுவரவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் தான் படத்தில் “லோன் ரேஞ்சர்”
தன் பழங்குடி இனத்தை சூறையாடிய சில சந்தர்ப்பவாதிகளை பழிவாங்க கிளம்புகிறார் போர் வீரன் Jhony Depp. அப்போது ஒரு இளம் வக்கீலை(Armie Hammer) ஆபத்திலிருந்து காப்பாற்ற நேரிடுகிறது. நாளடைவில் இருவரும் இணைந்து எங்கெல்லாம் தப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று தப்பு செய்தவர்களை தண்டிக்க தொடங்குகிறார்கள்.
பேராசை கொண்டவர்கள் மற்றும் ஊழல்வாதிகளை அழிக்க இவர்கள் செய்யும் சாகசபோரட்டம் தான் படத்தின் முக்கிய அம்சம். “The Lone Ranger” உலகமெங்கும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது. எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் தமிழிலும் இந்த படம் அதே நாளில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகவர்னர் துவக்கி வைத்த இளமை பயணம்!
