Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காலத்திற்கேற்ற அற்புதமான படம் தில்லு முல்லு - கே.பாலசந்தர்!

•On June 17, 2013
DSC_6315
Share
DSC_6315 32 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான தில்லு முல்லு படத்தின் ரீமேக்கில் சிவா நடித்துள்ளார். படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சிறப்பு காட்சியில் இயக்குனர் கே.பாலச்சந்தருக்காக திரையிடப்பட்டது. படம் பார்த்த கே.பாலசந்தர் தில்லு முல்லு படக்குழுவினரை பாராட்டினார். அவர் கூறும்போது, “இந்த தில்லு முல்லு படம் எனக்கே புதுசா இருக்கு நிறைய மாற்றங்கள் பண்ணிருக்காங்க. மாடர்ன் ஆகவும் இருக்கு. அதே சமயம் அனைவரும் பார்க்கும் விதமாகவும் அமைத்திருக்கிறார்கள். இது மிகபெரிய அளவில் commercial படமாக அமைந்துள்ளது. அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இசை அற்புதமாக வந்துள்ளது. சிவா மிக அருமையாக நடித்துள்ளார். டைரக்டர் பத்ரி பற்றி கூறும் போது, கொஞ்சம் கூட பழைய தில்லு முல்லு படத்தின் சாயலே இல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்ப மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் பத்ரி. இது ஒரு மிக பெரிய வெற்றிப் படம். தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.