Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஸ்வரூபம் - 2: தொடரும் மாற்றங்கள்!

•On June 17, 2013
Vishwaroopam-Movie-Working-Stills-1
Share
Vishwaroopam-Movie-Working-Stills-1 இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கமல் பற்றிய செய்திகளும், அவரின் படங்கள் பற்றிய செய்திகளுமே ஆக்கிரமித்து இருந்தன. ஏற்கனவே விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் விஸ்வரூபம் 2 படத்துக்கு முதல் பாகத்தில் ஒளிப்பதிவு செய்த சானு ஜான் வர்க்கீஸை மாற்றி ஷாம்தத் சைனுதீனை ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகின. விஸ்வரூபம் படத்தின் தரத்தில் இசைக்கு பெரும்பங்கு இருந்தது. தற்போது கமல்ஹாசன் அந்த இசையமைப்பாளரையும் மாற்றியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்வரூபத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்தனர். இந்நிலையில் அவர்களுக்குப் பதில் விஸ்வரூபம்-2 க்கு ஜிப்ரானை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகை சூடவா, வத்திகுச்சி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான் கமலின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பாடல்களிலும், பின்னணி இசையிலும். அவரின் இசையை கேட்ட கமல் அவரையே தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்திற்கு இசையமைத்துள்ளார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.