நேரடியாக களத்தில் இறங்கிய ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்!

 ,
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியான 'வட்டியிலும் முதலும்' பகுதியை எழுதியர் ராஜு முருகன். இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘குக்கூ'.
'குக்கூ' படத்தின் நாயகனாக 'அட்டகத்தி' தினேஷ் நடிக்க, நாயகியாக மாளவிகா நாயர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் 'வழக்கு எண் 18/9' படத்தின் மலையாள ரீமேக்கான 'Black Butterflies' படத்தில் நாயகியாக நடித்தவர்.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘குக்கூ' படத்தின் பூஜை இயக்குநர் லிங்குசாமி மற்றும் இயக்குநர் பாலா முன்னிலையில் நடந்தது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், 'குக்கூ' படத்தின் படத்தின் மூலம் நேரடியாக தமிழில் தயாரிப்பு களத்தில் இறங்குகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இவர் 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' போன்ற படங்களில் இசையமைத்தவர். ஒளிப்பதிவாளராக 'அட்டகத்தி' பிரேம்நாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
