மாதா மாதம், ஆரவாரம் - சூப்பர் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ்!

கடந்த ஆறு மாதங்களில் பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் இனிமேல் தான் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்றவர்களின் படங்கள் வெளியாக அணிவகுத்து நிற்கின்றன. அதாவது மாதத்திற்கு ஒரு பெரிய ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறது. முதலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது சூர்யாவின் சிங்கம் 2.
இதனை தொடர்ந்து மரியான் இந்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. சென்ற மாதம் வெளியாக வேண்டிய படம் மரியான். அதற்குள் தனுஷின் இந்திபடமான மற்றும் அம்பிகாபதி ஆகியவை அடுத்தடுத்து வெளியானதால், இப்போது மரியான் வேண்டாம் என்று முடிவெடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் மரியானின் ரிலீஸை தள்ளி வைத்தது.
இதனை தொடர்ந்து ஆகஸ்டில் விஜயின் தலைவா படமும், செப்டம்பரில் அஜித் - விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படமும் வெளியாக உள்ளன. அஜித், விஜயை தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ரஜினி, கமல் படங்கள் வெளியாகின்றன.
அக்டோபரில் கமலின் விஸ்வரூபம் 2 வெளியாகிறது. இப்போதே படத்தினை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் தீபாவளி சரவெடியாக வெளியாகிறது. எந்திரனுக்கு பின் ரஜினி படம் மூன்று வருடங்கள் கழித்து வெளியாவதால் தீபாவளி தினம் பொருத்தமாக இருக்கும் என்று வெளியிடுகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
