Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

DTH is a new way to protect Cinema says Kamalahaasan:

•On January 3, 2013
vcropped20
Share
திருட்டு DVD-யை ஒழிப்பதற்கான முயற்சிதான் விஸ்வரூபம் DTH ரிலீஸ்:  , விஸ்வரூபம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கான பாடல் பாடல் வெளியீட்டை ஹைதராபாத்தில் நடத்தினார் கமல். விழாவில் தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கலந்து கொண்டு பாடல் சி.டி.யை வெளியிட பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார். பின்னர் கமலஹாசன் பேசும்போது, "‘விஸ்வரூபம்' படம் தியேட்டருக்கு வருவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக DTH-களில் ஒளிபரப்பப்படும். DTH மூலம் படத்தை பார்ப்பவர்கள் வெறும் 3 சதவீதம் பேர் தான். தியேட்டருக்கு வராதவர்களும், வர முடியாதவர்களும் பார்ப்பதற்காகவே DTH-களில் ஒளிபரப்புகிறோம். எனவே மற்றவர்கள் கட்டாயம் தியேட்டரில் வந்துதான் பார்க்க வேண்டும். திருட்டு வி.சி.டி. மூலம் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புவதன் மூலம் திருட்டு வி.சி.டி.யில் அப்படம் வருவது தடுக்கப்படும். இதன் மூலம் லாபம் வருமா என்று சிலர் கேட்கிறார்கள். லாபம் வரும் என்று தெரிந்ததால் தான் இந்த ரூட்டைப் பிடித்தேன். என் படம் மட்டுமல்ல, இன்னும் எத்தனைப் படங்களை இந்த முறையில் வெளியிட்டாலும் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ரிஸ்க்கை தவிர்க்க இந்த DTH முறை உதவுகிறது. முந்தைய நாளே DTH-ல் படம் பார்ப்பவர்கள் படம் நன்றாக இல்லை என்று வெளியில் சொல்லி விட்டால் படத்திற்கு கூட்டம் குறைந்து விடும் .எனவே தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுமே என்று கேட்கிறார்கள். ஆனால் படத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருப்பதால் தைரியமாக DTH-ல் வெளியிடுகிறேன்" என்றார். முன்னதாக தாசரி நாராயணாராவ் பேசும்போது, "விஸ்வரூபம்' படத்தை DTH-களில் ஒளிபரப்புவதன் மூலம் கமலஹாசன் ஒரு புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை வரவேற்கிறேன். இந்த முறையை எதிர்ப்பவர்கள் பிறகு உண்மையை உணர்ந்து வரவேற்பார்கள். உலக நாயகன் என்பதற்கு தகுதியானவர் கமல்," என்றார்.  ,  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.