Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேவா இசையமைக்கும் பக்தி படம் “மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா”!!

•On October 25, 2013
DSC_0143
Share
DSC_0143 ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் “மேற்கு முகபேர் ஸ்ரீகனக துர்கா” என்ற பெயரில் பக்தி படம் ஒன்றை தயாரித்து வருகிறார்கள். சென்னையை அடுத்த முகப்பேரில் உள்ள ஸ்ரீகனகதுர்கா கோயிலில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த இந்த படத்தின் மையக் கரு. கிளைமாக்ஸ் காட்சியில் டெல்லி கணேஷ் பாடும் “சிலை என்று யார் சொன்னது? என்ற பாடல் காட்சியின் போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் முதல் படப்பிடிப்பு குழுவினர் வரை அனைவரும் மெய்சிலிர்த்து போயினர். இந்த படத்தில் புதுமுகங்கள் மகி, சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் டி.பி.கஜேந்திரன் நடிக்கிறார். நதியாஸ்ரீ, கவிதா, ராகவி, சுஷ்மிதா மற்றும் ஜெனிபர் ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள். இசை - தேனிசை தென்றல் தேவா. ஒளிப்பதிவு - N.D.சிவமனோகரன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி E.ஜெயபால் சுவாமி தயாரிக்கிறார். சந்திர கண்ணையன் இயக்குகிறார். சென்னை மற்றும் கொடைக்கானல், மூணார் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.