Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் இணையும் ஆர்யா-ராஜேஷ்-சந்தானம் கூட்டணி!!

•On November 29, 2013
AryaM.-Rajesh
Share
AryaM.-Rajesh கார்த்தி-ராஜேஷ்-சந்தானம் கூட்டணியின் அழகுராஜா தோல்வியால் உடனடியாக மூன்று பேருமே வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சில கூட்டணிகள் அறிவிப்பின்போதே வெற்றி நிச்சயம் என்ற உறுதியுடன் அறிவிக்கப்படும். அதைபோல ஆர்யாவுடன் இயக்குனர் ராஜேஷ் அமைத்த வெற்றி கூட்டணி 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை தொடர்ந்து இப்போது மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்க விழைகிறது. இந்நிலையில் தொடர் வெற்றிகளால் தற்போது உச்சத்தில் இருக்கும் ஆர்யா தன்னுடைய சொந்த பட நிறுவனமான 'The Show People' நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்க உள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தில் சந்தானமும் இணைவது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க உள்ளது. தங்களுடைய முந்தைய வெற்றி படங்களை விட இந்த படம் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என்று கூறுகின்றனர் ஆர்யா-ராஜேஷ்-சந்தானம் கூட்டணியினர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.