பெயர் மாறிய அன்னகொடிக்கு யு/ஏ!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப் படத்தின் பெயரை தற்போது அன்னக்கொடி என்று சுருக்கி வைத்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
இப்படத்தின் மூலம் லஷ்மன் நாராயண் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கார்த்திகா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனிடையே அன்னக்கொடி படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
