ஹிந்தி படங்களில் கலக்கவிருக்கும் விஜய் சேதுபதி!...

‘மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ‘கவண்’ படத்திற்குப் பின், ‘விக்ரம் வேதா’, ‘அநீதி கதைகள்’, ‘கருப்பன்’ மற்றும் ‘96’ ஆகிய படங்களில் இடைவெளியில்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.
பாலிவுட்டின் முன்னாள் பிரபல நடிகை பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி அறிமுகமாகும், மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா என்ற இந்தி படம் மூலம் பாலிவுட் சினிமாவிலும் நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி என்னவாக நடிக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், இந்தப் படம் காமெடி கலந்த கதையில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபள்ளி மாணவர் எரித்து கொலை.....
