Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மூன்று வேடங்களில் விஷால் நடிக்கும் "நாளை நமதே"

•On April 27, 2017
vishal1
Share
vishal1 கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தல் பணிகளில் பிசியாக ஈடுபட்டிருந்த விஷால் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ மற்றும் மித்ரன் இயக்கத்தில் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷால் தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘நாளை நமதே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இருவேடங்களில் நடித்து கடந்த 1975ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் தலைப்பு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு இரண்டு ஜோடிகள் என்றும், அதற்காக இரண்டு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடேசன் இயக்குகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.