Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லைகா நிறுவன தயாரிப்பில் நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் !

•On August 25, 2017
Nayantara Gorgeous Face Close Up Stills In Green Saree (9)
Share
Nayantara Gorgeous Face Close Up Stills In Green Saree (9) லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கும் படம் 'கோலமாவு கோகிலா'. இப்படத்தில் இவருடன் யோகிபாபு நடக்கிறார். இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் படத்தின் பெயரை சுருக்கமாக 'கோ கோ' எனவும் டைட்டில் கார்டில் குறிப்பிட்டுள்ளார்கள். 'கோலமாவு கோகிலா' படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். நயன்தாரா தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் இந்தப் படத்தில் நடிப்பார் எனத் தெரிய வருகிறது. தெலுங்கில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் 'சைரா' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பெரிய படங்களில் முன்னணி நாயகியாகவும், சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிக்கத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.