Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரஜினி படத்திற்கு இசையமைக்கிறாரா அனிருத்..?

•On January 6, 2015
anirudh-to-score-music-for-rajinis-film 1
Share

மொத்தமே ஐந்து படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தாலும் இந்த இரண்டு வருடங்களில் அனிருத்தின் வளர்ச்சி அபாரமானதுதான். தனுஷ் படத்தை தாண்டி, விஜய் படம் வரைக்கும் வந்துவிட்டவரின் அடுத்த இலக்கு ரஜினி படமாகத்தானே இருக்கும்.. அதற்கான நேரமும் வந்துவிட்டதாகவே அவரது நட்பு வட்டாரங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

லிங்காவின் சரிவிலிருந்து மீண்டுவர தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கிறாராம் ரஜினி. அதற்காக இயக்குனர் பி.வாசுவுடன் டிஸ்கஷன் நடத்திக்கொண்டிருப்பதாகவும் தகவல்.. ஏற்கனவே பாபா கொடுத்த வீழ்ச்சியில் இருந்து ‘சந்திரமுகி’ மூலம் ரஜினியை சரியவிடாமல் தாங்கிப்பிடித்தவர்தானே பி.வாசு.. ஆக இந்தப்படத்தில் தான் இசையமைக்கும் வாய்ப்பை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என நினைகிறாராம் அனிருத். அதுசரி.. அதுலயாவது ஒரிஜினல் மியூசிக் போட்டா சரி தான்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.