Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய "U" சான்றிதழுடன் பொங்கலுக்கு வருகிறது விஷாலின் "ஆம்பள":

•On January 6, 2015
Aambala Working Still
Share

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா மோத்வானி, சந்தானம், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், ஸ்ரீராம், கவுதம், வைபவ், எதிர் நீச்சல் சதீஷ், விச்சு மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் "ஆம்பள". இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஆதி என்னும் ஹிப் ஹாப் தமிழா. இப்படத்தை நாயகன் விஷால் தன்னுடைய "விஷால் பிலிம் பாக்டரி" மூலமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தணிக்கை இன்று நடைபெற்றுள்ளது. படத்தை தணிக்கை செய்த தணிக்கைக்குழு "ஆம்பள" படத்திற்கு "U" சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த திரைப்படத்தை அணைத்து தரப்பினரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படமாக இருக்கும் என மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறிய போட்டியுடன், பெரிய எதிர்பார்ப்போடு பொங்கல் தினத்தன்று உலகமெங்கும் ரசிகர்கள் மத்தியில் கம்பீரமாக "ஆம்பள" வரவிருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.