Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தனுஷ்-அமிதாப் இடையே ஈகோ மோதலா..?

•On January 7, 2015
shamitabh-poster
Share

ராஞ்சனா வெற்றியை தொடர்ந்து தனுஷ் இந்தியில் நடிக்கும் இரண்டாவது படம் தான் ஷமிதாப். பால்கி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக கமலின் இளைய மகள் அக்ஷரா அறிமுகமாகிறார்.

இளையராஜா இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த, இந்த ‘ஷமிதாப்’பின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரில் தனுஷை தண்ணி என்றும் தன்னை விஸ்கி என்றும் அழைக்கிறார் அமிதாப். இப்படி இருவருக்குமான ஈகோ மோதல் தான் படத்தின் கதையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.