காதலை மார்கெட்டுல ஷாப்பிங் பண்ணமுடியுமா.? – கானாபாலா கேள்வி.

முதல்ல பாடலாசிரியர்கள் எழுதி தருவதை பாடிவிட்டுப்போன கானா பாலா இப்போது அவரே சொந்தமாகவும் பாடல் எழுத ஆரம்பித்து அவரே பாடியும் வருகிறார். ‘போஸ்பாண்டி’ என்கிற படத்தில் “சந்தையில பஜாருல அங்காடியில மார்கெட்டுல ஷாப்பிங் பண்ண முடியுமாடா காதல” என்ற கானா பாலாவின் பாடல் இந்தப்படத்தில் இடம்பெற்று உள்ளது.
இந்த பாடல் யு டியூப்பில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.அட்டு பையன், லட்டு பொண்ணு - இது தான் இப்படத்தின் ஒரு வரி கவிதை. ‘போஸ்பாண்டி’ படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையாவே கதாநாயகனாக நடிக்கிறார். "ஆடி போனால் ஆவணி" பாடலுக்கு அடுத்து கானா பாலாவிற்கு இது நல்ல திருப்பு முனையை பெற்று தரும் என்கிறார் இயக்குனர் ராஜா சுப்பையா..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
