Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'குயின்' தமிழ் ரீமேக்கில் 'விவேகம்' பட நாயகி !

•On August 26, 2017
queen
Share
queen மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் நீண்ட் நாட்களாக தமிழில் 'குயின்' படம் ரீமேக் செய்வதாக பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படம் தொடங்க தாமதமாகிக் கொண்டே இருந்ததால், கங்கனா ராவத் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த தமன்னா விலகிவிட்டார். அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'குயின்' படத்தின் கதையை அப்படியே தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கவுள்ளார்கள். அக்டோபர் மாதம் மதுரையில் படப்பிடிப்பு துவங்குவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை படப்பிடிப்பைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீஸில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.