jio-வின் புதிய அறிமுகம் - இனிமே யாரு.. எங்கு தொலைந்தாலும் ஈஸியா ட்ராக் பண்ணி கண்டுபிடிச்சிடலாம்..!

ஜியோ கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட் டிவைஸ் பிரியர்களும் அறக்க பறக்கும் விதமாக நம்ப முடியாத பட்ஜெட்டில் ஜியோடேக் ஏர் (JioTag Air) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
முந்தைய மாடலில் ஜியோதிங்க்ஸ் ஆப் சப்போர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஜியோடேக் ஏர் மாடலில் ஆப்பிளின் ஃபைண்ட் மை ஆப் சப்போர்ட்டும் வருகிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு யூசர்கள் மட்டுமல்லாமல், ஆப்பிள் யூசர்களையும் தட்டித்தூக்க இருக்கிறது.
ஜியோடேக் ஏர் மாடலின் சிறப்பம்சங்கள் :
கீஸ், ஐடி கார்டு, வாலெட்டுகள், பர்ஸ்கள், லக்கேஜ், , பைக் போன்ற மதிப்பு மிக்க பொருட்கள் முதல் வளர்ப்பு பிராணிகள் வரையில் கீ-செயின் போன்ற ஒரு குட்டி டிவைஸை மாட்டிவிட்டால் போதும், எங்கிருந்தாலும் மொபைல் போன் மூலம் எளிதாக டிராக் செய்து கண்டுபிடித்து விடலாம். இது படங்களில் வருவதை போல அதீத டெக்னாலஜி கொண்டிருக்கும் போல, ஆகவே விலையும் அதிகமாக இருக்கும்.
சாதாரண மக்கள் வாங்கிவிட முடியுமா என்று கூட உங்களுக்கு தோன்றலாம். ஆனால், வழக்கம் போல ஜியோ நிறுவனம் அதையும் நம்ப முடியாத கம்மி விலையில் கொடுத்து டிராக்கிங் டிவைஸ் மார்கெட்டை அதிரவிட்டுள்ளது. இதன்படியே ஜியோடேக் ஏர் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் இந்த மாடலின் விற்பனை அறிமுக சலுகையில் மேலும் மலிவான விலைக்கு தொடங்கிவிட்டது.
ஜியோடேக் ஏர் அம்சங்கள் (JioTag Air Specifications): இது முந்தைய மாடலை போலல்லாமல், ஸ்லீக் மற்றும் காம்பாக்ட் டிசைன் கொண்டிருக்கிறது. பாலிகார்பனேட் பாடி வருவதால், டியூரபிலிட்டி பக்காவாக இருக்கும். இதன் மூலம் கீஸ், வாலெட்கள், லக்கேஜ், வளர்ப்பு பிராணிகள் போன்றவற்றை குறிப்பிட்ட தொலைவில் இருந்து டிராக் செய்து கண்டுபிடித்து கொள்ளலாம்.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) ஆகியவற்றில் கிடைக்கும் ஜியோதிங்க்ஸ் ஆப் (JioThings App) மூலம் டிராக்கிங் செய்து கொள்ளலாம். இது முந்தைய மாடலில் கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஆப்பிள் ஃபைண்ட் மை ஆப் (Apple Find My App) கனெக்டிவிட்டியும் வருகிறது. ஆகவே, ஐபோன், ஐபாட் டிவைஸ்களிலும் இதை பயன்படுத்தலாம்.
மேலும், இந்த ஜியோடேக் ஏர் மாடலின் லோகேஷனை மற்ற ஐபோன், ஐபாட் யூசர்களுக்கும் ஷேர் செய்து கண்டுபிடிக்க உதவலாம். இந்த மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. 90 முதல் 120dB வரையிலான சவுண்ட் அவுட்புட் வருகிறது. ஆகவே, இந்த ஜியோடேக் ஏர் மாடலின் அருகில் செல்லும்போது சவுண்ட் அலெர்ட் பெற்று கொள்ளலாம்.
அதேபோல டிஸ்கனெக்சன் அலெர்ட் (Disconnection Alert) சப்போர்ட் உள்ளது. ப்ளூடூத் ரேஞ்சுக்கு மேல் ஜியோடேக் ஏர் கொண்டுசெல்லப்பட்டால், ஆப் மூலம் அலெர்ட் பெற்று கொள்ளலாம். மேலும், லோகேஷன் அப்டேட்கள் கொடுக்கப்படும். உங்களது ப்ளூடூத் ரேஞ்சுக்கு மீண்டும் வந்துவிட்டால், ஆட்டோமேட்டிக் ரீகனெக்ட் செய்துகொள்ளப்படும். லாஸ்ட் மோட் ஆப்ஷன் உள்ளது.
இதை கொடுத்தால், அது தொலைந்துபோன பிறகு நோட்டோபிகேஷன் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த ஜியோடேக் ஏர் மாடலுக்கு 12 மாதங்கள் வரையில் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதோடு கூடுதலாக ஒரு பேட்டரி கொடுக்கப்படும். இந்த பேட்டரி மூலம் மேலும் 12 மாதங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். வெறும் 10 கிராம் மட்டுமே இதன் எடை வருகிறது.
இந்த ஜியோடேக் ஏர் மாடலில் ப்ளூ, ரெட் மற்றும் கிரே ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரூ.2,999ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இருப்பினும் அறிமுக சலுகையில் வெறும் ரூ.1,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு வநதுள்ளது. அமேசான் மட்டுமல்லாமல், ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகிவற்றில் இந்த ஜியோடேக் ஏர் மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
