Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

F I R - திரைப்பட விமர்சனம்

On February 12, 2022
FIR
Share

இயக்கம் - மனு ஆனந்த்
இசை - அஷ்வத்
நடிகர்கள் - விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரைசா வில்சன்

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்றைக்கு முஸ்லீம் என்பவர்கள் தீவிரவாதிகளாக தான்
பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் சாதரண வாழ்க்கை வாழ விரும்பும் மனிதன். ஒரு முஸ்லிம் பெயரால் அடையும் துன்பங்கள் அதிகம் அதைத்தான் இந்தப்படம் சொல்லியுள்ளது.

சென்னையில் கெமிக்கல் இன்ஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் இர்ஃபான். அன்பான அம்மா, அழகான வாழ்க்கை என எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவர் பார்ட் டைமாக வேலை செய்ய போகும் இடத்தில் நம் அரசாங்கம் கண்காணிக்கும் தீவிரவாதியை சந்திக்கிறார். நேஷனல் அதிகாரிகள் இர்ஃபானை பிந்தொடர அவர் போன இடத்தில் பாம் வெடிக்க பழி அவர் மேல் விழுகிறது. தன் முஸ்லீம் பெயரால் பழிக்கு ஆளாகியுள்ள நாயகன் அதிலிருந்து வெளிவருகிறாரா என்பது தான் படம்.

பொதுவாக விஷ்ணு விஷால் படங்கள் தேர்வு செய்வதில் கில்லாடி. அந்த வகையில் இந்தபடமும் அவருக்கு மணிமகுடமாக அமைந்துள்ளது எனலாம்.

இர்பான் பாத்திரத்தில் தன்னை அழகாக பொருத்தி கொண்டு படம் முழுதும் மிரட்டியிருக்கிறார். அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கும் நேரத்தில் பதறும் இடத்திலும் தன் மீதான குற்றத்தை களைய வேண்டும் என போராடுவதிலும் கவர்ந்திருக்கிறார். முக்கியமாய் இந்தப்படத்தை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்கே அவரை பாராட்டலாம்.

சிறுபான்மையினரான முஸ்லீம் நண்பர்கள் மீது இந்தியாவில் தற்போது நடந்து வரும் தாக்குதல்களும், அவர்கள் மீது காட்டப்படும் வெறுப்பும், உலகம் முழுக்க முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என முத்திரை குத்தப்படுவதும் என தற்போதைய உலகளாவிய பிரச்சனையை அழுத்தமான திரைக்கதையாக மாற்றியதற்கே இப்படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லலாம்.

மெதுவாக ஆரம்பிக்கும் படம் விஷ்ணு மாட்டும் இடத்திலிருந்து தீப்பிடித்தது போல் நகர ஆரம்பிக்கிறது. சின்ன சின்ன டீடெயில்களால படத்தை நகர்த்துவது சூப்பர்.

படத்தில் நாயகனை தாண்டி, ரைசா வில்சனும், கௌதம் மேனனும் கவனம் ஈர்க்கிறார்கள், அவர்கள் கதாப்பத்திரமும் அதை அவர்கள் செய்திருக்கும் விதமும் அட்டகாசம்.

படத்தை ஹாலிவுட் தரத்தில் தந்திருக்கிறார்கள், இசை ஒளிப்பதிவு எல்லாம் அட்டகாசம். க்ளைமாக்ஸ் காட்சிகளிள் அந்த பரபரப்பை நம்மிடமும் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

ஒரு நாலு முஸ்லீம் பேரை சொன்னால் நாமும் தீவிரவாதி என பின்னால் ஓடிடுவோம்ல, இங்க பேரை சொன்னாவெ நார்மலா நடக்கிறதே எனக்கு நடக்க மாட்டேங்குது என வசனங்களும் பளார். முதல்
படத்திலேயே முத்திரை பதித்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

தீவிரவாதிகள் ஊள்ளூர் ரௌடி போல் இயங்கிகோண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ளே வருபவன் எத்தனை விசாரணைக்கு பிறகு வருவான், இப்படி படத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நிறைய லாஜிக் ஓட்டைகள் முட்டிக்கொண்டு தெரியும். ஆனால் அதை நம்மை யோசிக்க விடாமல் செய்ததில் தான் படம் ஜெயித்திருக்கிறது.

F I R நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல திரில்லர் அனுபவம்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.