20 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்த போலி போலீஸ்: விழுப்புரம் போலீசார் கைது!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில் பின்னர் தன் காதலனுடன் பைக்கில் ஏறி அங்குள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அவர்கள் பணம் எடுத்துவிட்டு சென்ற நிலையில் ஒரு முகமூடி அணிந்த நபர் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அவர்கள் இருவரையும் அந்த நபர் வழிமறித்து நான் ஒரு போலீஸ் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என அவர்களை விரட்டிய நிலையில் பின்னர் அந்த காதலனை அவர் அடித்து விரட்டிவிட்டு பெண்ணை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அவர் செல்லும் வழியில் அந்த பெண்ணை மிரட்டி பணத்தை பறித்த நிலையில் பின்னர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். உடனடியாக அந்த பெண் கத்தி கூச்சலிடவே பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லாரன்ஸ் (36) என்பவர் போலீஸ்காரர் போல் நடித்த அந்த பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
