Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

14 வருடங்கள் முன்பு கமல் கடவுளை பற்றி அப்படி என்ன சொன்னார்! அதற்கு மாயோன் படக்குழு என்ன பதில் சொல்ல உள்ளதாம்!!

On June 2, 2022
Mayoon
Share
கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு, 14 வருடங்களுக்கு பிறகு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் மாயோன். இப்படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜா இசையமைப்பில், வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என இப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 500'க்கும் மேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவல் அதிகரித்துள்ளது. “மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.