ஸ்ரயாவுடன் இணையும் விமல்...

பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டகாரி - The Boss" என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்.
இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்க, ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் பிரபு, சத்யன், மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடம் ஏற்று இப்படத்தில் நடிக்கிறார்.
கபிலன் மற்றும் விவேக் பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை அமைத்து இயக்குகிறார், விஜய்யின் 'மதுர' படத்தை இயக்கிய R.மாதேஷ்.
விஜய் நடித்த மதுர, விஜய்காந்த் நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் இந்த மாதேஷ்.
மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்படும் படம் தான் இந்த "சண்டகாரி - The Boss".
திரிஷ்யம் எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அது மாதிரி மை பாஸ் கேரளாவில் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க் வெனிஸ் லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்த நிலையில், கொச்சின் கோவா காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் மாதேஷ் கூறியதாவது, "வித்தியாசமான ஆக்ஷன் காமெடி படம். முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது." என்றார் இயக்குனர் R.மாதேஷ்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
