ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் நடிக்கும் புதிய ஹாரர் திரைப்படம்

Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது. சமீப காலமாக ஹாரர் படங்கள் பல வந்தவண்ணம் உள்ள நிலையில் இப்படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன், எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.
நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் மற்றும் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா ஆகிய இருவரும் இப்படத்தில் வெவ்வேறு மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்காது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படத்தில் பாடல்களை விவேகா & குட்டி ரேவதி எழுத, K M ரயான் இசையமைத்துள்ளார். பாத்தின் ஒளிப்பதிவை விஜயகுமார் கிருஷ்ணா பதிவுசெய்ய, பிஜு.வ.டான் போஸ்கோ படத்தொகுப்பினை கையாளகிறார். இந்த புதிய ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படத்திரக்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி இயக்குகிறார் N ஹாரூன்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
