வைரலாகும் எஸ்பி வேலுமணி ரஜினிகாந்த் போட்டோ!

அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான எஸ்.பி. வேலுமணி. முன்னாள் அமைச்சரான எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமணம் வருகிற மார்ச் 3-ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈச்சனாரி செல்வம் மஹாலில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து முக்கிய பிரமுகர்களை எஸ்.பி. வேலுமணியும் அவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார் எஸ்.பி. வேலுமணி. இந்த சந்திப்பின்போது எஸ்.பி. வேலுமணி குடும்பத்தினரும் இருந்தனர். திருமண அழைப்பிதழை வழங்கிய பின் ரஜினியும் எஸ்.பி. வேலுமணியும் சிறிது நேரம் உரையாடியுள்ளனர். பின்னர் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்ட எஸ்.பி. வேலுமணி, தனியாகவும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இதேபோல், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரின் சகோதரர் சுதீஷ் ஆகியோருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியிருக்கிறார் எஸ்.பி. வேலுமணி. தொடர்ந்து அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை எஸ்.பி.வேலுமணி வழங்கி வருகிறார். மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள எஸ்.பி. வேலுமணி, அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்களை அழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
