Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வைத்தியம் பார்க்க வந்த சிறுமியை மருத்துவமனை கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன்: உபியில் பரபரப்பு!

On June 24, 2025
n66974474717507849461423039bee403ea335d76a502c533f7616eefb238bf192b17d9f10e2dbf9cb35b65
Share

உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அரசுக்கு சொந்தமான லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி ஒரு 15 வயது சிறுமி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு காலில் ஏதோ பிரச்சினை இருந்ததால் ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது.

அந்த சிறுமியுடன் அவரை கவனித்துக் கொள்ள அவரது தாயார் இருந்த நிலையில் அதே வார்டில் மோகித் என்ற ஒரு வாலிபரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரை அவரது சகோதரர் ரோகித் (20) என்பவர் கவனித்துக் கொண்டார்.

இந்நிலையில் சிறுமி கடந்த ஜூன் 20-ம் தேதி இரவு நேரத்தில் கழிவறைக்கு சென்றார். இதனை கவனித்த ரோகித் பின்னால் சென்று கழிவறையில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என அவர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு கூறாமல் இருந்த நிலையில் பின்னர் தன் தாயாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தால் சிறுமியின் தாயார் மருத்துவ கல்லூரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த ரோகித்தை கைது செய்ததோடு இந்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.