Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வேலைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலதிபர்!

On February 10, 2025
WhatsApp Image 2025-02-10 at 21.41.28 (1)
Share
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா (32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மனோஜ் என்பவரும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். திருமணமான மனோஜ் சித்ராவிடம் தனக்கு திருமணமாகவில்லை எனக் கூறிய நட்பாக பழகி வந்துள்ளார். நாளைடைவில் அது காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலை பார்த்து வந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனோஜ் தனியாக அலுவலகம் ஆரம்பித்து தொழில் செய்ய வேண்டும் அதற்கு பணம் இல்லை என சித்ராவிடம் கூறியுள்ளார். என்னால் முடிந்ததை தருகிறேன் நீங்கள் தொழில் ஆரம்பியுங்கள் எனக்கூறி இருவரும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே மாருதி நகரில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் அலுவலகம் ஆரம்பித்தனர். இந்நிலையில் சித்ராவிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என மனோஜ் ஆசை வார்த்தை கூறியதால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். அப்போது தொழில் தேவைக்காக சித்ராவிடம் இருந்து 3 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை மனோஜ் வாங்கி செலவு செய்துள்ளார். இதற்கிடையில் மனோஜ் – சித்ராவின் உறவு குறித்து தகவல் அறிந்த மனோஜின் மனைவி சித்ராவிடம் தகராறு செய்யவே மனோஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனது சித்ராவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா தான் வேலைக்கு வரவில்லை என்னிடம் வாங்கிய நகை பணத்தை திருப்பி தருமாறு மனோஜிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் எதையும் திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் நமக்குள் நடந்ததை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் மேலும் நாம் உல்லாசமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி மனோஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்து வரும் மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க சித்ரா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.