வீட்டுக்கு வந்த வெடிகுண்டு பார்சல்: 2018 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவத்திற்கு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது பிப்ரவரி 25, 2018 அன்று மென்பொருள் பொறியாளர் சௌமியா சேகர் சாஹுவுக்கு திருமணம் நடைபெற்றது. அதாவது திருமணமான ஐந்து நாட்களில் 'பரிசுப் பெட்டியாக' வந்த ஒரு கூரியர் பாக்கெட்டை திறந்த போது, அதில் இருந்த குண்டு வெடித்து அவர் உயிரிழந்தார். இவருடன் அவரது 85 வயது பாட்டி ஜெனமணியும் உயிரிழந்தார். இந்த சமபவத்தில் சௌமியாவின் மனைவி ரீமா இந்த சம்பவத்தில் தீவிரமாக காயமடைந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பேராசிரியர் பன்ஜிலால் மெஹருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து ஒடிசா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது பற்றி ஒடிசா குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பன்ஜிலால் மெஹர், சௌமியாவின் தாயார் சஞ்சுக்தா சாஹுவுடன் ஒரே கல்லூரியில் வேலை பார்த்துவந்தார். முதல்வர் பதவிக்கான போட்டியில் சஞ்சுக்தா சாஹு வெற்றி பெற்றதால் அவரை பழிவாங்கும் எண்ணத்தில், அவர் மகனுக்கு வெடிகுண்டு அனுப்பி கொன்றதாக தெரியவந்தது. வெடிகுண்டு தயாரிக்க மெஹர் தீபாவளிக்குப் பின் பட்டாசுகளை சேகரித்து, இணையத்தில் கற்றுக்கொண்ட நுட்பங்களின் மூலம் குண்டை உருவாக்கியதும் உறுதி செய்யப்பட்டது.
அந்த வெடிகுண்டை பரிசுப் பெட்டி போல மூடி, 'S.K. Sharma' என்ற போலி பெயரில் கூரியர் மூலம் அனுப்பியிருந்தார். ராய்ப்பூரில் சிசிடிவி இல்லாத கூரியர் நிலையத்தில் பார்சல் அனுப்பி தனது அடையாளத்தை மறைக்க முயற்சி செய்தார். ஆனால், பரிசுப் பெட்டியில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், காவல்துறை பல ஆதாரங்களை சேகரித்து, சிசிடிவி வீடியோ, மொபைல் தகவல்கள் மற்றும் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
வழக்கின் முடிவில், சௌமியாவின் தந்தை ரவீந்திர சாஹு, "நாங்கள் மரணதண்டனையை எதிர்பார்த்தோம். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்காக நீதித்துறைக்கு நன்றி," என்றார். அவரது தாயார் சஞ்சுக்தா சாஹு, "நாங்கள் மகனை இழந்துவிட்டோம். ஆனால் நீதியாவது கிடைத்தது," எனக் கூறினார். வழக்கை வழிநடத்திய ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா, "இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லையென்பது சவாலாக இருந்தது. ஆனால் அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்தது," என்று தெரிவித்தார். இது ஒடிசா மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
