Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வழுக்கை தலையில் முடியை நட்டு, உயிரைக் குடித்த சோகம்! - போலி மருத்துவருக்கு வலை வீச்சு!

On May 13, 2025
n66406210317470879891165cd0c7d8b443b7e231ae0eb7606231ba4660c5b32f057ec300c9a299cd34da96
Share

உத்திரபிரதேசம் மாநிலம் கேம்பூரில் உள்ள பவர் பிளாண்ட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் வினித் துபே. இவருக்கு தலை முடி கொட்டியதால் கடந்த மே 13ஆம் தேதி அன்று கேன்பூரில் உள்ள எம்பயர் கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த சிகிச்சையை மேற்கொண்ட அனுஷ்கா திவாரி என்ற பெண் தன்னை "டாக்டர்" என அறிமுகப்படுத்தி கொண்டார். பின் எந்தவித மருத்துவ பரிசோதனை அல்லது அலர்ஜி சோதனையும் இன்றி சிகிச்சை செய்துள்ளார்.

சிகிச்சைக்கு பின் வினித் துபேக்கு முகம் வீக்கம், உடல் சோர்வு என கடுமையான பக்கவிளைவுகள் தோன்றின. அவர் இரண்டு முறை கிளினிக்கிற்கு சென்ற பிறகும் நிலைமை மேலும் மோசமானது.

மார்ச் 14-ஆம் தேதி, அனுஷ்கா திவாரி வினித்தின் மனைவி ஜயாவை அழைத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சேர்க்கும்படி கூறி விட்டு தனது கைப்பேசியை அணைத்து விட்டு மாயமானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வினித் துபே உயிரிழந்தார். ஜயாவின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அனுஷ்கா திவாரி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், எந்த விதமான மருத்துவ தகுதியும் இல்லாதவர், அனுமதியின்றி கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.