Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வழக்கறிஞர் அவதாரம் எடுத்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்...

On December 26, 2022
VAralakshmi Sarathkumar
Share

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் அரசி.

வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா ஆகியோர் பாடல்களை எழுத சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்திரக்கு செல்வா. ஆர் ஒலிப்பதிவு செய்ய சூரியகிரண் இயக்கியுள்ளார்.


இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி ஒரு பாடலை எழுதியுள்ளார். நதியே அடங்காதே அணைக்குள் முடங்காதே... என்று பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பாடலை எழுதியிருக்கிறார்.

அண்ணன மிஞ்ச இங்க யாரும் இல்லை...எனும் துள்ளல் இசை பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இப்படத்தில் 6 சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திருக்கிறார்கள்.
ஸ்டண்ட் இயக்குனர் மிரட்டல் செல்வா இயக்கியுள்ள சண்டை காட்சியில் வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்காது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வேலூர் விஐடி கல்லூரியில் இரவு பகல் பாராது 55 நாட்கள் நடைபெற்றிருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.