Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வளர்ப்பு மகளே தாயைக் கொன்ற அவலம் : ஒடிசாவில் பரபரப்பு!

On May 18, 2025
WhatsApp Image 2025-05-18 at 00.10.07
Share

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்கிற பெண்ணை 13 வயது வளர்ப்பு மகள் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக தெருவில் கிடந்த 3 நாட்கள் மட்டுமே ஆன அந்த சிறுமியை ராஜலட்சுமி தத்தெடுத்து வளர்த்தார். தன்னுடைய கணவன் மரணம் அடைந்த பிறகு மகளுக்காக அவர் வேலை பார்த்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்து நல்ல படிப்பையும் கொடுத்துள்ளார்.

இந்த சிறுமி கணேஷ் ரத் (21), தினேஷ் சாஹூ (20) ஆகிய வாலிபர்களை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் ராஜேஸ்வரிக்கு தெரிய வந்ததால் தன்னுடைய மகளை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி தன் தாய்க்கு சம்பவ நாளில் தூக்கம் மருந்து கலந்து கொடுத்து பின்னர் தன்னுடைய காதலர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக சிறுமி கூறிய நிலையில் ராஜேஸ்வரியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த கொலை கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி ராஜேஸ்வரியின் சகோதரர் சிபா பிரசாத் மிஸ்ரா என்பவர் எதார்த்தமாக சிறுமியின் செல்போனை பார்த்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டதை அறிந்த அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ராஜேஸ்வரியை கொலை செய்த பிறகு பணம் மற்றும் நகைகளை எப்படி பறிக்க வேண்டும் என்பதும் இருந்துள்ளது.

இதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவர் உரிய புகார் கொடுத்த நிலையில் வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது மாணவி தங்க நகைகளை கொடுத்து கணேஷ் அதனை சுமார் 2.4 லட்சத்திற்கு அடமானம் வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த 30 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பயன்படுத்தினர். சிறுமியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.