Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மொத்தமாக திவாலான பை ஜூஸ் நிறுவனம்! காரணம் என்ன?

On October 18, 2024
WhatsApp Image 2024-10-18 at 13.37.15
Share

ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க எட்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்த பைஜூஸ், கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்கப் பின்னடைவுகளை சந்தித்துள்ளது, இதனால் தற்போது பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு ஜீரோ ஆகியுள்ளதாக இதன் நிறுவனர் பைஜூஸ் ரவீந்திரன் அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விர்ச்சுவல் பிரஸ் கான்பிரென்ஸ்-ல் தெரிவித்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.பைஜூஸ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு முதல் முக்கியமான காரணம், அதன் மூன்று முக்கிய முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதும், அதைத் தொடர்ந்து வந்த நிதி சவால்களும் தான்.பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் இதுகுறித்து இன்று பேசுகையில், மூன்று முக்கிய முதலீட்டாளர்கள் அதாவது ப்ரோசஸ் (Prosus), பீக் XV பார்ட்னர்கள் மற்றும் சான் ஜூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் ஆகிய நிறுவனத்தின் உறுப்பினர்கள் 2023 இல் ஒரே நேரத்தில் நிறுவனத்தின் இயக்குநரகத்தில் இருந்து விலகியதால், நிதி திரட்ட முடியாத நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டது என்று சோகத்துடன் கூறினார்.இந்த இயக்குநர்கள் வெளியேறியதோடு, அமெரிக்க கடன் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்ட 1.2 பில்லியன் டாலர் குறுகிய கடன் காரணமாக ஏற்பட்ட நிதி சிக்கல்கள், பைஜூஸ் நிறுவனத்தை நிலையற்ற நிலைக்குத் தள்ளியது.

கடன் வாங்கியது ஆரம்பத்தில் சாதகமாகத் தோன்றியிருந்தாலும், இறுதியில் மிகவும் நிதி சுமையாக மாறியதாக பைஜூ ரவீந்திரன் ஒப்புக்கொண்டார்.உலகளாவிய நிதி சூழல் அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் கடன் இறுக்கத்தால் புதிய முதலீடுகளை திரட்ட முடியாமல் கூடுதல் சிக்கலுக்கு பைஜூஸ் உட்படுத்தப்பட்டது. மேலும் பைஜூஸ் வாங்கிய 1.2 பில்லியன் டாலர் கடனை நிறுவனத்தின் வெளிநாட்டு வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த கடன் மூலம் சில சிறிய வெளிநாட்டு நிறுவனங்களும் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் தான் அமெரிக்காவில் நிறுவனத்திற்கு எதிதாக வழக்கு தொடுக்கப்பட்டு பைஜூஸ் வங்கிக் கணக்குகள் முடிக்கப்பட்டு, முக்கிய முதலீட்டாளர்கள் வெளியேறியதும் நிதி அழுத்தங்களும் அதிகரிக்க பைஜூஸ்-ன் மதிப்பு பெரிய அளவில் பாதித்துள்ளன.இந்தியாவில் பைஜூஸ் ஊழியர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளைத் தாண்டி ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் ரூ.158 கோடி நிலுவைத் தொகையைக் கோரி பிசிசிஐ மனுவின் பேரில், பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிராகத் திவால் நடவடிக்கைகளைத் தொடங்க தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) ஜூன் 16 அன்று உத்தரவிட்டது.ஆகஸ்ட் 27 அன்று, ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் TL, பீக் XV பார்ட்னர்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் IV, Peak XV பார்ட்னர்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் V, Sofina SA மற்றும் MIH Edtech இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களின் குழு ஆகியவை இணைந்து பைஜூஸ் நிறுவனத்தில் 16.75% பங்குகளை கொண்டுள்ளது. இந்த முதலீட்டாளர்கள் குழுவும் தற்போது NCLT அமைப்பை நாடியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.