ஐந்து மொழிகளில் கலக்க வரும் ஜெய் பீம்

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தீபாவளியன்று வெளியாகிறது.
'ஜெய் பீம்' இந்தி ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் '2டி என்டர்டெய்ன்மென்ட்' பேனரில் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டானது. வழக்கறிஞர் சந்துருவாக, ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் சூர்யா ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். இப்போது இந்தி ரசிகர்களை மகிழ்விக்க, படத்தின் இந்தி ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.
'ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லருக்கான லிங்க்: http://youtu.be/nnXpbTFrqXA
படத்தினை ராஜசேகர் கர்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். "ஜெய் பீம்" திரைப்படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர் பணியாற்றியுள்ளார்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
