Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மித்தாலி ராஜாக மாற போகும் நடிகை யார்?

On September 28, 2017
samantha
Share
samantha உலக கிரிக்கெட் கேப்டன்களிலேயே மிகவும் கூலான கேப்டனாக திகழ்ந்தவர் நம் தல தோனி. இவரின் வாழ்க்கை படம் கடந்த ஆண்டு கடந்தாண்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை விளக்கும் படத்தை எடுக்க உள்ளனர். மகளிர் கிரிக்கெட் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். mithali-raj சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும், இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டுச் சென்றதில் இவரின் பங்கு அதிகமானது. இந்த உலகக் கோப்பைத் தொடரின்போதும் அவர் புரிந்த மகத்தான சாதனைகளுக்காகப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. samantha_actress ஒவ்வொரு மொழியிலும் மிதாலிராஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு சமந்தா தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சமந்தாவின் திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் திருமணத்திற்கு பின்னர் ஒரு வாரம் கழித்து இந்த படத்திற்கான போட்டோஷூட் நடத்த சமந்தா ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.