Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மராட்டியில் பேசு! இல்லையேல் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு: சர்ச்சை வீடியோ வைரல்!

On May 14, 2025
WhatsApp Image 2025-05-14 at 22.47.20
Share

மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில்தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாலையோர ஐஸ்கிரீம் கடையில் அந்த ஆண், "உனக்கு மராத்தி தெரியுமா?" எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண் ஹிந்தியில், "நஹி ஆதா முஜே மராத்தி" என பதிலளிக்கிறார். பின்னர் அந்த ஆண், "நீ மராத்தியில் பேசவேண்டும்" என வற்புறுத்த, பெண் தொடர்ந்து மராத்தி பேசத் தெரியாது என்கிறார்.

https://x.com/gharkekalesh/status/1921944534469992757?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1921944534469992757%7Ctwgr%5E21c52ea7317886ffc6cfc32e0c177f3e1c4fffca%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F

வாக்குவாதம் கடுமையாகிவிட்ட நிலையில், அந்த ஆண், "மராத்தியில் பேசமாட்டாயா? அப்படியானால் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு" என கூறுகிறார். அதற்கு அந்தப் பெண், "நான் என் விருப்பப்படி பேசுவேன், என் மொழி என் உரிமை" எனக் கூறி தைரியமாக பதிலளிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மொழி அடிப்படையில் ஒருவரை வற்புறுத்துவது தவறு என கண்டித்துள்ளனர். ஒருவர், "மொழியியல் சகிப்பற்ற தன்மை இவ்வாறு தொடர்ந்தால், நம்மிடம் தேவையற்ற பிளவுகள் உருவாகும்" என கருத்து தெரிவித்தார். வீடியோ எப்போது, எங்கே ஏற்பட்டது என்பது தற்போது உறுதியாகவில்லை என்றாலும், இது மொழி அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.