Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மகளின் தகாத உறவால் குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட பாட்டி!

On June 19, 2025
n6690515971750351018949180f932632debf82de7c8c1fe5a431d4b217dfb85369d92243dec2780cf1550f
Share

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார்.

இவரது மகள் பவித்ராவுக்கும் (28), பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு லித்திக்ஷா என்ற 9 வயது மகளும், தீதிஷா என்ற 5 வயது மகளும் இருக்கிறார்கள். இதில் பிரபாகரன் அந்த பகுதியில் ஒரு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இதில் பவித்ராவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பைனான்சியருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தனர். இது பவித்ராவின் கணவனுக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் பைனான்சியருடன் அவரது மனைவி ஓடிவிட்ட நிலையில் பின்னர் குடும்பத்தினர் அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஆனாலும் பவித்ரா அடங்கவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கொத்தனாருடன் இனிக்க இனிக்க செல்போனில் பேசி கள்ளக்காதலை வளர்த்துள்ளார். அவருடன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உல்லாசம் அனுபவித்த பவித்ரா பின்னர் அவருடன் ஓடிப் போய்விட்டார். இந்நிலையில் பவித்ரா நேற்று முன்தினம் பவித்ரா வீட்டை விட்டு ஓடிய நிலையில் அவரது குடும்பம் மிகுந்த மனவேதனையில் இருந்தது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி பவித்ராவின் தாய் செல்லம்மாள் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனை அவர் தன் தாய் காளீஸ்வரியிடம் கூறிய நிலையில் அவரும் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுளள்ளார். இதைத்தொடர்ந்து செல்லம்மாள் தன்னுடைய இரு பேத்திகளையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த நிலையில் பின்னர் அவரும் காளீஸ்வரையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மறுநாள் காலை பிரபாகரன் குழந்தைகளையும் மாமியாரையும் தேடிய நிலையில் நான்கு பேரும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நால்வரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.