Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிளான் பண்ணி பண்ணனும் - திரைப்பட விமர்சனம்

On January 4, 2022
Plan Panni 1
Share

இயக்கம் - பத்ரி வெங்கடேஷ்
நடிகர்கள் - ரியோ, பாலசரவணன், ரம்யா நம்பீசன்

கதை - தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞர்கள், பணத்தை தொலைப்பதால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிகிறார்கள் என்பதே கதைக்கரு.

ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் ரியோ மற்றும் பால சரவணன். இவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விழாவிற்கு, நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக நிறுவனத்தில் ஒரு பெரும் தொகையை வாங்குகிறார்கள். 
இந்நிலையில், நடனமாடிய நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து தொலைந்து போகிறது.
இன்னொரு பக்கம், பால சரவணனின் தங்கையும் காணாமல் போகிறார். நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்பி கேட்க ஆரம்பிக்கிறார்கள் வேலை சிக்கலுக்கு உள்ளாக ஆரம்பிக்க, ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும், தங்கையையும் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இறுதியில் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை காப்பற்றிக்கொண்டார்களா என்பதே கதை.

நடிகர் ரியோவுக்கு இரண்டாவது படம். மனிதர் தன் நகைச்சுவை திறமையை அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பாலசரவணனும் இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது. பணத்தை காணமல் போக அதைக்கண்டுபிடிக்க இவர்கள் போடும் திட்டங்கள் சிரிப்பை வரவழைக்கிறது. படத்தின் முக்கிய பலமே இவர்கள் காமெடி தான்.

நடிகை ரம்யா நம்பீசன் எதார்த்த நடிப்பில் கவர்ந்துள்ளார். ரோபோ சங்கர், பால சரவணன், தங்கதுரை அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

முழுக்க காமெடி படம் லாஜிக் தேவையில்லை என்பதை முடிவு செய்து படம் எடுத்திருக்கிறார்கள் - ஆனால் கொஞ்சம் லாஜிக்கோடு திரைக்கதையிலும் வேகம் கூட்டியிருக்கலாம்.

ஒரு நகைச்சுவை படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். ஒரு சிறிய கதையை அழகான முழு நீள காமெடியாக மாற்றி ஜெயித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

சிரித்து என்ஜாய் பண்ண ஒரு நல்ல பிளானாக இருக்கும் இந்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.