Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படத்தின் பாடல் ஜனவரி 13 வெளியீடு

On January 12, 2022
Yaanai 1
Share
வெற்றி நாயகன் அருண் விஜய், வெற்றி இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது . பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி "யானை" பட ரசிகர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர். மாலை 5மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது. இப்படத்தில் அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்திற்கு இசை G.V.பிரகாஷ், நடன இயக்குநர்கள் பாபா பாஸ்கர் மற்றும் தினா. கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு சண்டைக்காட்சிகளை அமைக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்காக வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்.தயாரிக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இசை டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.